உலகம்

துருக்கியில் கார் வெடிகுண்டு தாக்குதலில் 11 பேர் பலி

செய்திப்பிரிவு

துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் போலீஸ் வாகனத்தை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர்.

இஸ்தான்புல் நகரின் மையப் பகுதியில், வரலாற்று சிறப்பு மிக்க பெயாஸித் சதுக்கம் அருகில் நேற்று காலை போலீஸார் ஒரு பஸ்ஸில் சென்றுகொண்டி ருந்தனர். அப்போது சாலை யோரம் நிறுத்தி வைக்கப்பட்டி ருந்த ஒரு காரை பஸ் கடந்து செல்லும்போது, காரில் பொருந் தப்பட்டிருந்த வெடிகுண்டை ரிமோட் கன்ட்ரோல் மூலம் தீவிர வாதிகள் வெடிக்கச் செய்தனர். இதில் அந்த பஸ்ஸும் அருகில் உள்ள கட்டிடங்களும் சேதம் அடைந்தன.

குண்டு வெடிப்பில் 7 போலீஸார், 5 பொதுமக்கள் என மொத்தம் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 36 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குண்டு வெடிப்பை தொடர்ந்து அப்பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தும் சப்தம் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப் பேற்கவில்லை.

துருக்கியில் குர்திஷ் பிரிவினை வாதிகளின் தேசவிரோத செயல்கள் மற்றும் அண்டை நாடான சிரியாவில் நிலவும் உள்நாட்டுப் போர் காரணமாக சமீப காலமாக வன்முறை அதிகரித்துள்ளது.

துருக்கி பாதுகாப்பு படைக்கு எதிரான போரில் தோல்வி அடைந்த தீவிரவாதிகள் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக அதிபர் ரிசப் தய்யிப் எர்டோகன் அண்மையில் கூறினார்.

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான அமெரிக்க கூட்டணிப் படையில் துருக்கி அங்கம் வகிக்கிறது. இராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் கூட்டணிப் படைகள் தங்கள் நாட்டு விமான தளங்களை பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது.

துருக்கி அரசுக்கும் குர்திஷ் தீவிரவாத பி.கே.கே. அமைப் புக்கும் 2 ஆண்டுகளாக அமலில் இருந்து சண்டை நிறுத்த உடன் பாடு கடந்த கோடையில் முறிந்து போனது. கடந்த மாதம் இஸ்தான்புல் நகரில் ராணுவ வாக னத்தை குறிவைத்து, கார் வெடி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 8 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பி.கே.கே. தீவிரவாதிகள் பொறுப்பேற்றனர்.

SCROLL FOR NEXT