வடகொரியாவிடம் இனி பொறுமையை கடைபிடிக்கப் போவதில்லை என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார்.
தென்கொரிய தலைநகர் சியோலுக்கு அரசு முறை பயணமாகச் சென்றுள்ள ரெக்ஸ் டில்லர்சன் இன்று (வெள்ளிக்கிழமை) பத்திரிகையாளர் சந்திப்பில், "வடகொரிய அணு ஆயுதங்களைத் தயாரிப்பதை தடுத்து நிறுத்த கடந்த 20 ஆண்டுகளாக அந்த நாட்டுடன் பல்வேறு வழிகளில் பேச்சுவார்த்தை நடத்தினோம். இனியும் வடகொரியாவுடன் பொறுமையை கடைபிடிக்கப் போவதில்லை" என்றார்
முன்னதாக ஜப்பானுக்கு அரசு முறை பயணமாகச் சென்ற அமைச்சர் ரெக்ஸ் அந்த நாட்டு வெளியுறவு அமைச்சர் புகிமோ கிசிடாவை, டோக்கியோவில் சந்தித்து வடகொரியாவின் நடவடிக்கை குறித்து விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.