உலகம்

பாகிஸ்தானில் தற்கொலைப்படைத் தாக்குதல்: பலி 22; காயம் 50

பிடிஐ

பாகிஸ்தானில் வடமேற்கு பழங்குடி பிராந்தியத்தில் நடத்த தற்கொலைப்படை தாக்குதலில் 22 பேர் பலியாகினர். 50 பேர் காயமடைந்தனர்.

பாகிஸ்தானின் டான் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், பாகிஸ்தானின் மேற்கு பழங்குடி பிராந்தியத்தில் மக்கள் அதிகம் கூடும் சந்தைப் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) நுழைந்த தீவிரவாதி தனது உடம்பில் கட்டப்பட்டிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்.

இந்த தற்கொலைப் படை தாக்குதலில் 22 பேர் பலியாகினர். 50 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர்.

காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. பாதுகாப்புக்காக மருத்துவமனையைச் சுற்றி போலீஸார் குவிக்கபட்டுள்ளனர்." என்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

பாகிஸ்தான் பிரதமர் கண்டனம்:

இந்த தற்கொலைப் படை தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, "தீவிரவாதிகளுக்கு எதிராகப் போர் தொடுப்பது நமது கடமை, பயங்கரவாதிகளின் தொடர்புகள் ஏற்கெனவே அழிக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதிகளை வேருடன் அழிக்கும் வரை இந்த மண்ணில் அவர்களுக்கெதிரான போர் தொடரும்" என்றார்.

SCROLL FOR NEXT