அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந் திர மோடி, இன்று அந்நாட்டு அதி பர் டொனால்டு ட்ரம்பை சந்தித்துப் பேசுகிறார். இந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவு உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இந்தியப் பிரதமர் மோடி 3 நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதலில் போர்ச்சுகல் நாட்டில் பயணத்தை முடித்து விட்டு நேற்று அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் வந்தடைந் தார். இங்குள்ள புகழ்பெற்ற ‘வில்லார்ட் இன்டர்கான்டினென் டல்’ நட்சத்திர ஓட்டலில் தங்கினார். முன்னதாக அவர் வருவதை அறிந்து அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் பலர் ஓட்டலுக்கு வெளியில் காத்திருந்தனர்.
காரில் மோடி வந்ததும் இந்தி யர்கள் உற்சாகமாக குரலெழுப்பி னர். காரில் இருந்து இறங்கிய மோடி, இந்தியர்களின் பக்கம் கையை அசைத்தபடி அவர்கள் அருகில் சென்றார். அப்போது, உற்சாகத்தில் ‘மோடி மோடி’ என்று இந்தியர்கள் ஆர்ப்பரித்தனர். அவர்களுக்கு வாழ்த்துத் தெரி வித்த மோடி பின்னர் ஓட்டலுக்குச் சென்றார்.
மூன்று நாட்கள் அமெரிக் காவில் தங்கியிருக்கும் பிரதமர் மோடி, அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை இன்று பிற்பகல் முதல் முறையாக சந்தித்து இருநாட்டு உறவுகள், தற்போது நிலவும் சிக்கல்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்நிலையில், பிரதமர் மோடியை உண்மையான நண்பர் என்று அதிபர் ட்ரம்ப் பாராட்டி உள்ளார். தவிர அதிபர் பொறுப் பேற்ற பிறகு வெள்ளை மாளிகை யில் முதல் முறையாக பிரதமர் மோடிக்கு இன்று இரவு அவர் விருந்து அளிக்கிறார்.
இதுகுறித்து ட்விட்டரில் ட்ரம்ப் வெளியிட்ட பதிவில், ‘‘வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடியை வரவேற்க ஆவலுடன் எதிர்ப் பார்த்து காத்திருக்கிறேன். உண் மையான நண்பர் மோடியுடன் பேசும் போது, பல்வேறு முக்கிய விஷயங்கள் இடம்பெறும்’’ என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு பிரதமர் மோடி ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.