பிரதமர் நரேந்திர மோடியை பிரிட்டன் நாட்டுக்கு வருமாறு அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் அழைப்பு விடுத்துள்ளார்.
பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தபோது இது குறித்து கூறியதாவது, "பிரதமர் மோடி பிரிட்டனுக்கு வர வேண்டும். இதுவரை எங்கள் நாட்டின் சார்பில் துணை பிரதமர், வெளியுறவுத்துறை செயலாளர் ஆகியோர் இந்தியாவுக்கு சென்றுள்ளனர்.
நான் பிரதமாராக பதவியேற்றதிலிருந்து 3 முறை இந்தியா வந்துள்ளேன். பிரதமர் நரேந்திர மோடி பிரிட்டன் வர வேண்டும் என்பதில் நாங்கள் ஆவலுடன் உள்ளோம். இந்தியாவுடன் நுல்லுறவு மேற்கொள்ள இந்த பயணம் வாய்ப்பாக அமையும்" என்றார்.