சீனாவுக்கு கழுதைகளை ஏற்றுமதி செய்ய பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது, இதற்காக கழுதை வளர்ச்சித் திட்டம் உருவாக்கப்பட்டு சுமார் ரூ.100 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் கழுதைகளுக்கான தேவை அதிகம். காரணம் அதன் தோல் மருந்து உற்பத்திகளில் பயன்படுகிறது என்பதே. மேலும் பல விதங்களிலும் சீனாவில் கழுதைகள் பயன்படுகின்றன.
சீனாவின் கழுதைகள் தேவையைக் கணக்கில் கொண்டு பாகிஸ்தான் பெரிய அளவில் கழுதை வளர்ப்புப் பண்ணைகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது, இதற்காக பெரிய அளவில் பயிற்சி அளிப்புத் திட்டங்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் பிற பணியாளர்களை தேர்ந்தெடுத்து வருகிறது பாகிஸ்தான்.
கைபர்-பத்துன்க்வா பகுதியில் மட்டுமல்லாது பிற பழங்குடியினர் பகுதியில் வசிக்கும் கழுதை வளர்க்கும் பிரிவினருக்கு இதனால் பெரிய அளவில் பொருளாதார முன்னேற்றம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.