உலகம்

ஜப்பான் கடலில் ஏவுகணையை செலுத்திய வடகொரியா

பிடிஐ

ஜப்பான் கடல் பகுதியில் வடகொரியா ஏவுகணையை செலுத்தியுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. மேலும் வடகொரியாவின் தொடர் அணு ஆயுத சோதனைக்கு அமெரிக்கா கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் தரப்பில், வடகொரியா தொடர்ந்து நடத்தி வரும் அணு ஆயுத சோதனைகளின் அபாயத்தைத் தடுக்க தொடர்ந்து பரிசீலித்து வருகிறோம். இந்நிலையில் சில மணி நேரங்களுக்கு முன்னர் ஜப்பான் கடலில் வடகொரியா ஏவுகணை செலுத்தியது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபுளோரிடாவில் உள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் இருப்பிடத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு நடைபெற உள்ள நிலையில் வடகொரியா ஏவுகணையை செலுத்தியுள்ளது.

ஜப்பான் கடலில் வடகொரியா நடத்தியுள்ள ஏவுகணை செலுத்தியது குறித்து பசிபிக் கடல் பிராந்தியத்தை கண்காணித்து வரும் அமெரிக்க கடற்படை அதிகாரிகள், "வடகொரியா புதன்கிழமையன்று காலை 11.42 மணியளவில் ஜப்பான் கடலில் ஏவுகணை செலுத்தியது. இதுகுறித்து கண்காணித்து வருகிறோம்" என்று கூறியுள்ளனர்.

முன்னதாக வடகொரியாவின் அணுசக்தித் திட்டங்களுக்கு எதிராக சீனா நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அமெரிக்கா தனியாக எதிர்கொள்ளும் என்று அமெரிக்க அதிபர் டர்ம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT