பிலிப்பைன்ஸ் நாட்டை கட்நத வெள்ளிக்கிழமை தாக்கிய 'ஹையான்' புயலால், 10,000-த்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பார்கள் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், வியட்நாம் நாட்டையும் ஹையான் புயல் தாக்கியது. இன்று அதிகாலையில், வடக்கு வியட்நாமில் 'ஹையான்' புயல் கரையைக் கடந்தது.
இதனால், தலைநகர் ஹனோயில், மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் வீசிய பலத்த சூறைக்காற்றுடன் கன மழையும் பெய்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சக்கணக்கான மக்கள் அபாயகரமான பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர். கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.
புயல் குறித்து மிகவும் கால தாமதாகவே எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தலைநகர் ஹனோய் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சேத விபரங்கள் குறித்த தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.