ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அடுத்தடுத்து 3 குண்டுகள் வெடித்தன. இதில் 20 பேர் பலியாகினர். 35 பேர் படுகாயம் அடைந்தனர்.
கடந்த 31-ம் தேதி காபூலில் உள்ள இந்தியத் தூதரகம் அருகே நிகழ்த்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் 90 பேர் உயிரிழந்தனர். இதை கண்டித்து நேற்றுமுன்தினம் காபூலில் பிரம் மாண்ட பேரணி நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
அப்போது போலீஸாருக் கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் உயிரிழந்தனர். அவர்களில் ஒருவரின் இறுதிச் சடங்கு காபூலில் நேற்று நடைபெற்றது. அப்போது தொடர்ந்து 3 குண்டு கள் வெடித்தன. இதில் 20 பேர் உயிரிழந்தனர். 35-க்கும் மேற் பட் டோர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் அரசு செய்தித் தொடர்பாளர் கூறும்போது, ‘‘இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் ஆப்கானிஸ்தான் தலைமை நிர்வாக அதிகாரி அப்துல்லா அப்துல்லா உட்பட ஏராளமான அரசு உயரதிகாரிகள் பங்கேற்றனர். அவர்களை குறிவைத்து தாக்குதல் நடத் தப்பட்டுள்ளது. எனினும் அவர் களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. தற்போதைய நிலை யில் பொதுமக்கள் எவ்வித ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் பங்கேற்காமல் அமைதிகாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்’’ என்றார்.