உலகம்

ரஷ்ய மனநல காப்பக தீ விபத்தில் 14 பேர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

மத்திய ரஷ்யாவிலுள்ள வெலிகை நவ்கரட் நகரத்தில் அமைந்துள்ள மனநல காப்பகத்தில் வெள்ளிகிழமை நிகழ்ந்த தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.

அதிகாலை மூன்று மணியளவில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டபோது, அக்காப்பகத்தில் 60-க்கும் மேற்பட்டவர்கள் இருந்ததாகத் தகவல்கள் தெரிவித்தன.

இந்த விபத்திலிருந்து பலர் உயிர் தப்பி சென்றிருக்கலாம் எனவும், தீயணைப்பு துறையினர் இன்னும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT