உலகம்

பட்டாசு வெடிக்காமல் சீனப் புத்தாண்டு கொண்டாட்டம்

செய்திப்பிரிவு

பட்டாசு வெடிக்காமல் சீனப் புத்தாண்டை கொண்டாட அந்த நாட்டு மக்கள் உறுதி மேற்கொண்டுள்ளனர்.

சீனத் தலைநகர் பெய்ஜிங், வர்த்தக நகரான ஷாங்காய் உட்பட முக்கிய நகரங்களில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சீனா முழுவதும் இன்று சீனப் புத்தாண்டு கொண் டாடப்படுகிறது. இதையொட்டி வாண வேடிக்கைகள், பட்டாசுகள் வெடிப்பது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு காற்று மாசுவைக் கட்டுப்படுத்த பட்டாசு வெடிக்க வேண்டாம் என்று பெய்ஜிங் நிர்வாகம் உட்பட பல்வேறு நகரங்களின் உள்ளாட்சி அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் விழிப் புணர்வு பிரச்சாரமும் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

சீனாவின் ஹெனான் மாகா ணம் முன்னோடியாக செயல் பட்டு அந்த மாகாணம் முழுவதும் பட்டாசு வெடிக்க தடை விதித் துள்ளது. இதை மற்ற மாகாணங் களும் பெருநகர மக்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த ஆண்டு 719 பட்டாசு கடைகளுக்கு அரசு அனுமதி அளித்திருந்தது. இந்த ஆண்டு 511 பட்டாசு கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த கடைகளிலும் பட்டாசு விற்பனை மிகவும் மந்தமாக உள்ளது.

பட்டாசு வெடிப்பது தொடர்பாக பெய்ஜிங் நகர மக்களிடம் அண் மையில் கருத்துக் கணிப்பு நடத் தப்பட்டது. இதில் 80 சதவீத மக்கள் பட்டாசை புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாக தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT