சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் எல்லையில் ஒரு சென்டிமீட்டரைக் கூட இழக்க முடியாது. அது தேசத்தின் அடிப்படையான, முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என சீனா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
தென் சீனக் கடல் எல்லையில் சர்ச்சைக்குரிய தீவுகளை உரிமை கொண்டாடுவதற்கு சீனாவுக்கு சட்ட ரீதியாகவோ, வரலாற்று ரீதியாகவோ உரிமை இல்லை என தி ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இதனை ஏற்க முடியாது என சீனா தெரிவித்து விட்டது. இதே கருத்தை சீனா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக சீனாவின் வெளியுறவுத் துறை கவுன்சிலர் (வெளியுறவு அமைச்சரை விட உயர் தகுதியுடைய பதவி) யாங் ஜியெச்சி கூறும்போது, “சீனா மிகப்பெரிய பரப்பை உடையதாக இருக்கலாம். ஆனால், மூதாதையர் விட்டுச் சென்றவற்றில் ஒரு சென்டிமீட்டர் பகுதியைக் கூட இழக்க முடியாது. இறையாண்மை விவகாரம் என்பது சீனாவின் முக்கியமானது விஷயம்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய சீன எல்லைப் பிரச்சி னையில், யாங் ஜியெச்சி சீனா வின் சிறப்பு பிரதிநிதியாக பேச்சு வார்த்தையில் பங்கேற்று வரு கிறார். எனவே, ஜியெச்சியின் இக் கருத்து இந்தியாவுக்கு முக்கிய மான ஒன்றாக கருதப்படுகிறது.
ஆசிய-ஐரோப்பிய மாநாடு மங்கோலியாவின் உலன்பாதர் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் சீன பிரதமர் லீ கெகியாங்கும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும் கலந்து கொண்டனர். அவர்கள் நேற்று சந்தித்துப் பேசினர்.
அப்போது பிரதமர் லீ கெகியாங் கூறியதாவது: தென் சீனக் கடலில் ஜப்பான் நேரடி யாக ஈடுபடவில்லை. எனவே வார்த்தையிலும் நடவடிக்கை யிலும் ஜப்பான் அரசு கட்டுப் பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். தென் சீனக் கடல் பிரச்சினையில் தலையிடக்கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்கு பிரதமர் ஷின்சோ அபே கூறியபோது, தென்சீனக் கடல் பகுதி சர்வதேச பிரச்சினை. இந்த விவகாரத்தில் ஹேக் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை சீன அரசு மதித்து நடக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.