உலகம்

3 திருநங்கைகளுக்கு பாகிஸ்தான் அரசு வேலை

செய்திப்பிரிவு

பாகிஸ்தானின் சிந்து மாநில அரசு முதன் முறையாக 3 திருநங்கைகளுக்கு வெவ்வேறு துறைகளில் அரசுப் பணிகளை வழங்கி உள்ளது. ரிபே கான், முஸ்கான் மற்றும் அஞ்சும் ஆகிய மூவருக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளதை சிந்து மாநில சமூகநலம் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ருபினா கைம்கானி வியாழக்கிழமை உறுதிப்படுத்தி உள்ளார்.

இது முதல்கட்டம்தான் என்றும் மற்ற திருநங்கைகளுக்கும் விரை வில் அரசுப் பணி வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித் துள்ளார். ரிபே கான் முதுநிலை பட்டமும், முஸ்கான் மற்றும் அஞ்சும் ஆகிய இருவரும் பள்ளிக்கல்வி (மெட்ரிக்) வரையும் படித்துள்ளனர். மொத்தம் 5 லட்சம் திருநங்கைகள் இருப்பதாக அலுவல் ரீதியிலான மதிப்பீடு கூறுகிறது.

இதுகுறித்து ரிபே கான் செய்தி யாளர்களிடம் கூறுகையில், "சமுதாயத்தில் எங்களுக்கு மதிப்பளித்து, எங்கள் மீது அக்கறை கொண்டு அரசு வேலை வழங்கியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது" என்றார். திருநங்கைகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கி, தேர்தலில் வாக்களிக்க அனுமதி அளிக்க வேண்டும் என கடந்த 2011-ல் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

SCROLL FOR NEXT