உலகம்

ஆளில்லா இரானிய விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியது?

ஏஎஃப்பி

பலுசிஸ்தான் மாகாணத்தில் பறந்த இரானிய ஆளில்லா விமானத்தை (ட்ரோன்) பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

பலுசிஸ்தான் மாகாணத்தின் பஞ்ச்குர் மாவட்டத்தில் பரோம் அருகே, அதாவது எல்லையருகே இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. பாதுகாப்புப் படையினர் விமானத்தின் பாகங்களை கைப்பற்றியதாக வெளியாகியுள்ள செய்தி குறித்து இன்னும் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

பாகிஸ்தான் முன்னணி நாளிதழான டான் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது பாகிஸ்தான் வான்வெளியில் இரான் ஆளில்லா விமானம் பறந்ததையடுத்து சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவை நிறுத்தவில்லை எனில் பாகிஸ்தானில் புகுந்து தாக்குவோம் என்று இரான் ஏற்கெனவே பாகிஸ்தானை எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT