உலகம்

சிரியாவில் ஆயுதக் கிடங்கு மீது இஸ்ரேல் தாக்குதல்

ஏஎஃப்பி

சிரியாவின் டமாஸ்கஸ் விமான நிலையம் அருகில் நேற்று அதிகாலை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஆயுதக் கிடங்கு மற்றும் எரிபொருள் டேங்க்குகள் எரிந்து நாசமாயின.

லெபானான் தீவிரவாதக் குழுவின் ‘அல்-மனார்’ தொலைக் காட்சி இத்தகவலைத் தெரிவித்தது. ஆனால், இந்த ஆயுதக் கிடங்கு தங்களுடையதா அல்லது சிரிய ராணுவதுக்கு சொந்தமானதா அல்லது அதன் கூட்டணி படை யினருக்கு உரியதா என்ற தகவலைத் தெரிவிக்கவில்லை.

சிரியாவில் 2011-ல் உள்நாட்டுப் போர் தொடங்கியது முதல் அந்நாட்டில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் பெரும்பாலானவை லெபனான் தீவிரவாதக் குழுவான ஹிஸ்புல்லா மற்றும் அதன் ஆயுதங்களைக் குறிவைத்தே நடத்தப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT