உலகம்

இந்திய மீனவர்கள் 29 பேரை கைது செய்தது பாகிஸ்தான்

ஐஏஎன்எஸ்

பாகிஸ்தான் கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்ததாக கூறி இந்திய மீனவர்கள் 19 பேரை அந்நாட்டு அதிகாரிகள் நேற்று சிறை பிடித்தனர். இவர்களின் 5 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

பாகிஸ்தான் கடலோர பாதுகாப்புப் படை வெளியிட்ட தகவலில் அடிப்படையில் ஜியோ டி.வி. இச்செய்தியை ஒளிபரப்பியது. சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்படு வார்கள் எனவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த மாதம் இந்திய மீனவர்கள் சுமார் 100 பேர் பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். 19 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுமே தங்கள் கடல் எல்லையில் நுழைந்ததாக மீனவர் களை பரஸ்பரம் கைது செய்வது வழக்கமாக உள்ளது.

SCROLL FOR NEXT