உலகம்

சீனாவில் வறுமைகோட்டுக்கு கீழ் வாழ்பவர்கள் எண்ணிக்கை 8 கோடி

பிடிஐ

சுமார் 135 கோடி மக்கள் தொகையை கொண்ட சீனாவில் 8.2 கோடிக்கும் மேலானவர்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளனர். அவர்கள் நாளொன்றுக்கு ரூ.60 மட்டுமே சம்பாதிக்கின்றனர்.

சீனா மக்களின் வறுமை கூறித்து அந்நாட்டு வறுமை ஒழிப்பு மற்றும் மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் ஷிகெங் வென்கய் கூறியது: சீனா பொருளாதார ரீதியாக வேகமாக வளர்ந்து வந்தாலும் வறுமையின் பிடியில் ஏராளமான மக்கள் இருப்பது பெரும் பிரச்சினையாக உள்ளது. எனினும் கடந்த 30 ஆண்டுகளில் 60 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளோம். வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்பவர்கள் கிராமப்புறங்களில்தான் அதிகம் உள்ளனர்.

அக்டோபர் 17-ம் தேதி வறுமை ஒழிப்பு தினமாக கடைபிடிக்க இருக்கிறோம். அன்று முதல் வறுமை ஒழிப்பு திட்டங்கள் முழுவீச்சில் செயல்படுத்தப்படும் என்றார்.

SCROLL FOR NEXT