ஸ்காட்லாந்தைச் சேர்ந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எலைத் பேட்டர்சன் என்ற சிறுமியின் திருமண ஆசையை அவரது பெற்றோர்கள் நிறைவேற்றியுள்ளனர்.
எலைத் பேட்டர்சன் (5) புற்றுநோயல் பாதிக்கப்பட்ட தன் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் எலைத்தின் பெற்றோர்கள் அவரது இறுதி ஆசையை நிறைவேற்ற ஆவல் கொண்டு அவரிடம் கேட்டுள்ளனர். அதற்கு எலைத் அளித்த பதில்தான் அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.
தனக்கு இளவரசியை போல் திருமணம் நடைபெற வேண்டும் என்று எலைத் கூறியுள்ளார். மேலும் தனது 6 வயது நண்பரான ஹாரிசன் க்ரேர்ரை திருமணம் செய்து கொள்ளவும் எலைத் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இவர்களது திருமணம் செவ்வாய்கிழமை மிக விமர்சியாக நடந்தேறியுள்ளது.
திருமண விழாவில் இரு வீட்டாரது குடும்பத்தினரும் கலந்து கொண்டு இருவரையும் கண்ணீர் மல்க வாழ்த்தியுள்ளனர்.