பிரான்ஸ், போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் பல்வேறு இடங்களில் காட்டுத் தீ பரவி 4 பேர் இறந்தனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பிரான்ஸ் நாட்டின் தெற்கில் மத்திய தரைக் கடலை ஒட்டி அமைந்துள்ளது மர்சேய். அந்நாட் டின் 2வது பெரிய நகரமாகவும் மிகப்பெரிய வர்த்தக துறைமுக நகராகவும் விளங்குகிறது. இந் நகரை நோக்கி பல இடங்களில் இருந்து காட்டுத் தீ பரவி வருகி றது. இதில் 2,700 ஹெக்டேர் வனப்பகுதி தீயில் கருகியுள்ளது. மர்சேய் நகரில் இருந்து வடக்கே உள்ள விட்ரோல்ஸ், அருகில் உள்ள பென்னஸ் மிராபியூ ஆகிய சிறு நகரங்களில் ஏராளமான வீடுகள் எரிந்து நாசமாகின.
தீயணைக்கும் பணியில் விமா னங்கள், ஹெலிகாப்டர்கள் ஈடுபடு வதற்கு வசதியாக மர்சேய் நக ருக்கு வரும் விமானங்கள் சுற்றுப் பாதையில் வந்து தரையிறங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுபோல் போர்ச்சுகல் நாட்டி லும் பல்வேறு இடங்களில் காட் டுத் தீ பரவி வருகிறது. இதன் முக்கிய நிலப்பரப்பில் மட்டும் நேற்று முன்தினம் 136 காட்டுத் தீ சம்பவங்கள் நிகழ்ந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. தலைநகர் லிஸ்பனுக்கு வடக்கே வனப் பாதுகாவலர் ஒருவர் தீயில் சிக்கி இறந்தார். போர்ச்சுகலுக்கு சொந்தமான மடேரா தீவில் 3 முதியவர்கள் பலியாகினர்.
இரு நாடுகளிலும் காட்டுத் தீயிக்கு தீயணைப்பு வீரர்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.