எகிப்தின் புதிய அரசமைப்பு சட்டத்துக்கு பெரும்பான்மையான வாக்காளர்கள் ஆதரவு தெரிவித் துள்ளனர் என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. எனினும், வாக்குப்பதிவு சத வீதம் தொடர்பான அதிகாரபூர் வமான அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.
எகிப்தில் முகமது மோர்ஸி அதிபராக இருந்தபோது கொண்டு வரப்பட்ட அரசமைப்புச் சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவரை ராணுவம் பதவியிலிருந்து நீக்கியது. இதைத் தொடர்ந்து ராணுவத் தின் ஆதரவுடன் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. புதிய அரசமைப்புச் சட்டம் உரு வாக்கப்பட்டு, அது தொடர்பான பொதுவாக்கெடுப்பு கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமை நடத்தப்பட்டது.
வாக்கெடுப்பை புறக்கணிக்கு மாறு முகமது மோர்ஸிக்கு ஆதர வாக செயல்படும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. அதை பொருட்படுத்தாது பெருமளவிலான வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். “மொத்தம் உள்ள 5 கோடியே 30 லட்சம் வாக்காளர்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் வாக்குப் பதிவில் பங்கேற்றுள் ளார்கள் என நம்புகிறோம்” என்று அரசின் செய்தித்தொடர்பாளர் ஹனி சலாஹ் கூறினார்.
வாக்களித்தவர்களில் 90 சத வீதத்தினர் புதிய அரசமைப் புச் சட்டத்துக்கு ஆதரவு அளித்திருப்பதாகக் கூறப் படுகிறது. எனினும், எத்தனை வாக்குகள் ஆதர வாகவும், எதிர்ப்பாகவும் கிடைத்தன என்ற விவரங்கள் வெளியிடப் படவில்லை.
ராணுவத் தளபதி போட்டி?
அரசமைப்புச் சட்டத்துக்கு மக்கள் அமோக ஆதரவு அளித்துள்ளதைத் தொடர் ந்து, இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ராணுவத் தலைமைத் தளபதி அப்துல் படாஹ் அல் – சிசி போட்டியிடும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.
பான் கி மூன் கருத்து
எகிப்தில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பு தொடர்பாக குவைத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் பான் கி மூன் கூறியதாவது:
“பொதுவாக்கெடுப்பு வெளிப்படைத் தன்மையுடனும், நம்பகத் தன்மையுடனும் நடைபெற் றிருக்கும் என நம்புகிறேன். ஆனால், அது தொடர்பான உறுதியான விவரங்கள் எதுவும் எங்களுக்கு வரவில்லை” என்றார்.
இதற்கிடையே அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகை யில், “எகிப்தில் ஜனநாயக ரீதியான மாற்றம் ஏற்பட்டு வருவதை ஊக்குவிக்கும் வகை யில் 150 கோடி டாலர் உதவி வழங்கும் முடிவுக்கு அமெரிக்க நாடாளுமன்றம் விரைவில் ஒப்பு தல் அளிக்கவுள்ளது” என்றார்.