ஒசாமா பின்லேடனின் இருப்பிடம் குறித்த தகவலை அமெரிக்க உளவுத் துறைக்கு தெரிவித்த டாக்டருக்கு விதிக்கப்பட்ட 33 ஆண்டு சிறை தண்டனை 10 ஆண்டுகளாக குறைக்கப் பட்டுள்ளது.
பாகிஸ்தானின் அபோதாபாதில் ரகசியமாக வசித்து வந்த பின் லேடனை கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் 2-ம் தேதி அமெரிக்க படையினர் சுட்டுக் கொன்றனர். இதனால் பாகிஸ்தான் அரசுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில், டாக்டர் ஷகீல் அப்ரிடி தடுப்பூசி முகாம் நடத்துவது போல நாடகமாடி பின்லேடனின் இருப்பிடத்தைக் கண்டறிந்து அமெரிக்க உளவுத் துறைக்கு தகவல் தெரிவித்ததாக தகவல் வெளியானது.
இதையடுத்து, அப்ரிடியை கைது செய்த பாகிஸ்தான் அரசு, தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-இஸ்லாம் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்தது.
இதை விசாரித்த பழங்குடியின பகுதி நிர்வாக தீர்ப்பாயம் (எப்ஏடிஏ) அப்ரிடிக்கு 33 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்ததுடன், ரூ.3.2 லட்சம் அபராதம் விதித் தது. அப்ரிடி இப்போது பெஷாவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதை எதிர்த்து பிரன்டீர் கிரைம்ஸ் ரெகுலேஷனில் (எப்சிஆர்) அப்ரிடியின் வழக்கறி ஞர் மேல் முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த எப்சி ஆர், எப்ஏடிஏ அளித்த தீர்ப்பை சனிக்கிழமை உறுதி செய்தது. அதேநேரம், அப்ரிடியின் தண்ட னைக் காலத்தை 10 ஆண்டுகளா கக் குறைத்து உத்தரவிட்டது.