உலகம்

உக்ரைன் ஆயுத கிடங்கில் தீ 20,000 பேர் உயிர் தப்பினர்

செய்திப்பிரிவு

கீவ் உக்ரைன் நாட்டின் ராணுவ ஆயுத கிடங்கில் நேற்று திடீரென தீப்பிடித்தது. அதன் அருகில் வசித்தவர்கள் உடனடியாக வெளியேற் றப்பட்டதால் சுமார் 20 ஆயிரத்துக் கும் மேற்பட்டோர் உயிர் தப்பினர்.

ரஷ்ய எல்லையை ஒட்டிய உக்ரைனின் பலாக்லியா பகுதியில் அந்த நாட்டு ராணுவத்தின் மிகப் பெரிய ஆயுத கிடங்கு உள்ளது. அங்கு நேற்று அதிகாலை திடீரென தீப்பிடித்தது.

அந்த கிடங்கில் பணியாற்றி யவர்கள், அருகில் வசித்தவர்கள் அனைவரும் உடனடியாக வெளி யேற்றப்பட்டனர். இதனால் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிர் தப்பினர்.

பல ஏக்கர் பரப்பளவில் அமைந் துள்ள ஆயுத கிடங்கு பயங்கரமாக பற்றி எரிகிறது. இதனால் சுமார் 40 கி.மீ. தொலைவு வான்பரப்பில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உக்ரைன் ராணுவ மூத்த அதிகாரி அனாலோடி மேத்திஸ் கூறியபோது, ஆயுத கிடங்கிற்கு தீவிரவாதிகள் தீ வைத் திருக்கக்கூடும் என்று சந்தேகிக் கிறோம் என்று தெரிவித்தார்.

உக்ரைன் நாட்டின் டோன்ஸ்க், லூகான்ஸ் பகுதியைச் சேர்ந்த கிளர்ச்சிக் குழுக்கள் அந்த நாட்டு அரசுக்கு எதிராக உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வருகிறது. இதன் காரணமாக கடந்த 2014 ஏப்ரல் முதல் இதுவரை 9,800 பேர் உயிரிழந்துள்ளனர்.

SCROLL FOR NEXT