உலகம்

’டோன்ட் வொரி...பி ஹேப்பி’ பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியதற்கு ரஷ்ய அதிபர் புதின் பதில்

ஏபி

'டோண்ட் வொரி பி ஹேப்பி' என்று பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியுள்ளது குறித்து ரஷ்ய அதிபர் புதின் கருத்து தெரிவித்துள்ளார்.

பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார். ட்ரம்பின் இந்த முடிவுக்கு உலகத் தலைவர்கள பலர் தங்களது கண்டனத்தைத் தெரிவித்தனர்.

இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புதினிடம் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது குறித்து கேட்கப்பட்டது,

அதற்கு பதிலளித்த புதின் கூறும்போது, ''டோண்ட் வொரி பி ஹேப்பி, 2021ஆம் ஆண்டில்தான் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் என்பதால், புவிவெப்பமயமாதல் தொடர்பாக ஆக்கபூர்வமான திட்டங்களை வகுக்க நாடுகளுக்கு அவகாசம் உள்ளது" என்று குறிப்பிட்டார்.

பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தால் அமெரிக்காவில் தொழில் நிறுவனங்கள் மற்றும் வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படுகின்றன. பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம் ஒருதலைபட்சமாக உள்ளது, அமெரிக்கா ஏகப்பட்ட பில்லியன் டாலர்கள் தொகையை செலவழிக்கிறது. ஆனால் இந்தியா, சீனா போன்ற பிற நாடுகளே பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தால் பயனடைக்கின்றன. இதனால் அமெரிக்கா பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக ட்ரம்ப் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT