உலகம்

சிங்கப்பூரில் தமிழ்மொழி விழா

செய்திப்பிரிவு

சிங்கப்பூரில் தமிழ்மொழி விழா 2014 நடைபெற்று வருகிறது. மார்ச் 29-ம் தொடங்கி ஏப்ரல் 27-ம் தேதிவரை நடைபெறும் இந்த விழாவில் திருக்குறள் முதல் இன்றைய தகவல் தொழில்நுட்பத்துறை வரை தமிழ் மொழியின் சிறப்பை உணர்த்தும் பல்வேறு நிகழ்ச்சிகளும் இடம் பெற்றுள்ளன.

சிங்கப்பூரில் உள்ள தமிழ் மாணவர்கள், இளைஞர்கள் என தமிழ் பேசும் மக்கள் அனைவருக்கும் பயனளிக்கும் வகையிலும், நம் மொழியின் சிறப்பை உணர்ந்து கொள்ளும் வகையிலும் இந்த விழா நடைபெறுகிறது.

அனைவரையும் தமிழ் மொழி சென்றடைய வேண்டும். வெளிநாட்டில் தமிழர்கள் தங்கள் மொழி அடையாளத்துடன் ஒருங்கிணைந்து இருக்க வேண்டும். தமிழர்கள் அனைவரும் பங்கேற்று பயனடைய வேண்டும் என்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம் என்று தமிழ் மொழி சங்க தலைவர் ராஜாராம் தெரிவித்துள்ளார்.

தமிழை நேசிப்போம், தமிழில் பேசுவோம் என்பதே இந்த விழாவின் மையக் கருத்து. சிங்கப்பூரின் பிரதமர் அலுவலக அமைச்சர் ஈஸ்வரன் விழாவை தொடங்கி வைத்தார்.

தமிழின் பெருமையை உணர்த் தும் கலை நிகழ்ச்சிகள், சொற்பொழி வுகள், நாடகம், விவாதம், கவிதை, இசை, நடனம், புத்தக வெளியீடு, பட்டி மன்றம் என பல்வேறு சிறப்பம்சங்க ளுடன் தமிழ் மொழிவிழா நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT