உலகம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜார்ஜ் புஷ் வாக்கு ஹிலாரிக்கு?

கார்டியன்

அமெரிக்க அதிபர் தேர்தலில் தனது வாக்கு ஹிலாரிக்கே என்று அந்நாட்டின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபிள்யூ. புஷ் தெரிவித்துள்ளதாக ஜான் கென்னடி குடும்ப உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் கென்னடியின் மருமகளான காத்லீன் கென்னடி ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர். அவர் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஹிலாரிக்கு ஆதரவாக தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார். அதனை ஒட்டி அமெரிக்க முன்னாள் அதிபரும், குடியரசு கட்சியைச் சேர்ந்தவருமான ஜார்ஜ் புஷ்ஷை அவரது இல்லத்தில் சந்தித்திருக்கிறார் காத்லீன்.

இந்தச் சந்திப்பு குறித்து காத்லீன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், முன்னாள் அதிபர் புஷ், ஹிலாரிக்கு வாக்களிக்கவுள்ளதாக பதிவிட்டிருக்கிறார்.

காத்லீன் கென்னடிபதிவிட்ட ஃபேஸ்புக் பதிவு

ஆனால் இது குறித்து ஜார்ஜ் புஷ் தரப்பிலிருந்து அதிகாரபூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.

SCROLL FOR NEXT