சர்வதேச சமூகத்தின் அமைதி நடவடிக்கையில் இணைய தாலிபான்களுக்கு ஆப்கன் அதிபர் அஷ்ரப் கானி அழைப்பு விடுத்துள்ளார்.
சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்ற அமைதி மற்றும் மறுக்கட்டமைப்பு மாநாட்டில் ஆப்கன் அதிபர் அஷ்ரப் கானி கலந்து கொண்டு சர்வதேச அளவில் அமைதியை நிலைநாட்டும் வழிவகைகள் குறித்து பேசினார். அப்போது தனது பேச்சில் தாலிபான்கள் குறித்து குறிப்பிட்டு பேசாத அவர், அங்கிருந்து புறப்பட்டு விமான நிலையம் சென்றபோது செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.
அப்போது அவர் கூறும்போது, "அமைதி தான் நாட்டின் முதல் உரிமை. நாங்கள் அனைத்து எதிர்க்கட்சிகளையும் மற்றும் குறிப்பாக தாலிபான்களை அமைதி பேச்சுக்காக அழைக்கிறோம். மேலும், சர்வதேச நாடுகள் அனைத்தும் ஆப்கான் வழிநடத்த இருக்கும் அமைதி நடவடிக்கைகளுக்கும் ஆப்கானில் அமைதி நிலவ வேண்டிய நடவடிக்கைக்கும் ஆதரவு அளிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.