உலகம்

அதிக வருவாய் ஈட்டிய பாப் கலைஞர்களில் மடோனா முதலிடம்

செய்திப்பிரிவு

நடப்பு ஆண்டில் அதிக வருவாய் ஈட்டிய பாப் இசைக் கலைஞர்கள் பட்டியலில் பாடகி மடோனா முதலிடத்தில் உள்ளார்.

பாப் குயின் என்று அழைக்கப்படும் 55 வயது அமெரிக்க கலைஞரான இவர், 2012 ஜூன் முதல் 2013-ம் ஆண்டு மே மாதம் வரையிலான காலகட்டத்தில் ரூ.787 கோடி வருவாய் ஈட்டியுள்ளார்.

இதன் மூலம், உலக அளவில் மிகுதியான ரசிகர்களைக் கொண்ட இளம் பாப் நட்சத்திரங்களான லேடி காகா, ரிஹானா, கேட்டி பெர்ரி, ஜஸ்டின் பீபர் ஆகியோரை மடோனா பின்னுக்குத் தள்ளியுள்ளதாக ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், ரூ.504 கோடி வருவாயுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார் லேடி காகா. அவருக்கு அடுத்தபடியாக ரூ.497 கோடியுடன் பான் ஜோவி 3-ம் இடம்பெற்றுள்ளார்.

SCROLL FOR NEXT