உலகம்

இலங்கை ராணுவ வீரர்களுக்கு அமெரிக்கா கண்டனம்

செய்திப்பிரிவு

ஹைத்தி நாட்டில் இலங்கை ராணுவ வீரர்கள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள ஹைத்தியில் ஐ.நா. அமைதிப் படை முகாமிட்டுள்ளது. அங்கு 134 இலங்கை வீரர்கள் ஐ.நா. அமைதிப் படைக்காக பணியாற்றி வருகின்றனர். அவர்கள் ஹைத்தி சிறுமிகளை பல ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்திருப்பது ஐ.நா. சபை விசாரணையில் தெரியவந்தது.

ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே இந்த விவகாரம் குறித்து ஐ.நா. சபையில் பேசியபோது, “இலங்கை ராணுவ வீரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகும் ராணுவ வீரர்களை இலங்கை அரசு சிறையில் அடைப்பது இல்லை. தவறு செய்த வீரர்கள் தண்டிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

ஐ.நா. அமைதிப்படை வீரர்கள் பல்வேறு நாடுகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 12 ஆண்டுகளில் அமைதிப்படை வீரர்கள் மீது 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலியல் புகார்கள் சுமத்தப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.

SCROLL FOR NEXT