உலகம்

ஐ.நா. பொதுச் செயலர் பதவிக்கு முறைசாரா தேர்தல் தொடங்கியது

ஏபி

ஐ.நா.வின் தற்போதைய பொதுச் செயலாளர் பான் கி மூனின் பதவிக் காலம் இந்த ஆண்டு இறுதியில் முடிவடைய உள்ள நிலையில் அடுத்த பொதுச் செயலாளர் பதவிக்கான முதல் முறைசாரா தேர்தல் நேற்று நடைபெற்றது.

ஐ.நா. சாசனப்படி, அதன் பொதுச் செயலாளரை பாதுகாப்பு கவுன்சில் பரிந்துரையின் பேரில் 193 உறுப் பினர்களை கொண்ட பொதுச் சபை நியமிக்கிறது. இதில் 5 நிரந்தர உறுப்பு நாடுகளுக்கு ரத்து அதி காரம் இருப்பதால் இந்த 5 நாடு களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருவரே பொதுச் செயலாளர் பதவிக்கு பரிந்துரை செய்யப் படுவது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில் அடுத்த பொதுச் செயலாளர் பதவிக்கு 12 வேட்பாளர் கள் போட்டியிடும் நிலையில் இவர் களில் ஒருவரை தேர்வு செய்வதற் கான முதல் முறைசாரா தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் பாது காப்பு கவுன்சிலின் 15 நாடுகளும் தாங்கள் யாரை ஆதரிக்கிறோம் என்பதை இம்முறை ரகசியமாக வைக்க உள்ளன.

10 ஆண்டுகளுக்கு முன் இப் பதவிக்கு பான் கி மூன் தேர்வு செய் யப்பட்டபோது, எந்த உறுப்பினர் கள் யாரை ஆதரித்தனர் என்பது வெளிப்படையாக அறிவிக்கப்பட் டது. இதற்கு மாறாக தற்போது ரகசியம் காக்கப்பட உள்ளது.

ஐ.நா. பொதுச் செயலாளர் பதவிக்கு இதுவரை ஒருமுறை கூட பெண்கள் தேர்வு செய்யப்படவில்லை என்ற கருத்தும் நிலவுகிறது. இந்நிலையில் ஐ.நா. பொதுச் செயலாளர் பதவிக்கான போட்டியில் 6 பெண்கள் உட்பட 12 பேர் உள்ளனர். இவர்களில் 8 பேர் கிழக்கு ஐரோப்பாவை சேர்ந்தவர்கள், இருவர் லத்தீன் அமெரிக்காவையும் ஒருவர் மேற்கு ஐரோப்பாவையும் மற்றும் ஒருவர் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தையும் சேர்ந்தவர் ஆவர்.

SCROLL FOR NEXT