உலகம்

பாக்தாத் தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐஎஸ் பொறுப்பேற்பு

ஏபி

இராக் தலைநகர் பாக்தாத் நகரில் புதன்கிழமை இரவு நடத்த தற்கொலைப் படை தாக்குதலில் 18 பேர் பலியானதற்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

பாக்தாத்தின் தென் பகுதியிலுள்ள சோதனைச் சாவடியில் புதன்கிழமை இரவு லாரியைக் கொண்டு தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 17 பேர் பலியாகினர். 48 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் 3 பேர் போலீஸ் அதிகாரிகள் ஆவர்.

இந்த நிலையில் தற்கொலைப் படை தாக்குதலை தாங்கள்தான் நடத்தியதாக ஐஎஸ் அமைப்பு இன்று பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

மேலும் மோசூலில் நடக்கும் யுத்தம் பாக்தாத்திலும் தொடரும் என்று ஷியா முஸ்லிம்களை அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

SCROLL FOR NEXT