உலகம்

எம்.எப். ஹுசைன் நூற்றாண்டு விழா

செய்திப்பிரிவு

ஓவியர் எம்.எப். ஹுசைனின் நூற்றாண்டு விழா முன்னோட்டமாக, அவர் தன்னைத்தானே வரைந்து கொண்ட 25 அரிய ஓவியங்கள் இடம்பெற்றுள்ள கண்காட்சி துபையில் தொடங்கியுள்ளது.

கடந்த 1915 செப்டம்பர் 17 ஆம் தேதி பிறந்த ஓவியர் எம்.எப். ஹுசைன் 2011 ஆம் ஆண்டு மறைந்தார். அவர் துபையில் பல ஆண்டுகள் வசித்தார். அவரின் நூறாவது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் முன்னோட்டமாக, துபையில் உள்ள இறையாண்மை கலைக்காட்சியகத்தில் அவர் தன்னைத் தானே வரைந்து கொண்ட 25 அரிய புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. வரும் டிசம்பர் 12 ஆம் தேதி வரை இந்தக் கண்காட்சி நடைபெறும்.

தாதிபா பண்டோல் அருங்காட்சியகத்தினர் இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். ஹுசைனின் மேலும் பல ஓவியப் படைப்புகளும் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

தன்னைத் தானே வரைந்து கொண்ட ஓவியங்களில் ஹுசைனின் பல்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு செயல்களில் அவர் ஈடுபட்டதை சித்திரிக்கின்றன.

பென்சில் வேலைப்பாடு, ஆயில் பெயிண்டிங், கலவையான பெயின்டிங் என அவரின் பல்வேறு வகையான ஓவியங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT