சீனாவின் பல மாகாணங்களில் கடந்த சில நாட்களாக பயங்கர மழை பெய்து வருகிறது. இதனால் 10-க்கும் மேற்பட்ட மாகாணங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக சீனாவில் 6.8 லட்சம் மக்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
குறிப்பாக ஹூபே மாகாணத்தில் கனமழையால் இதுவரை 114 பேர் பலியாகி உள்ளதாகவும் 111 பேர் காணாமல் போனதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். தவிர அன்யாங் நகரில் 18 பேர் இறந்துள்ளனர். மற்ற 9 பேர் காணாமல் போயுள்ளனர். இவர்களுடன் சேர்த்து மொத்தம் 250 பேர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
அன்யாங் நகரம்தான் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. நகர் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நகரில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன. ஒரு லட்சத்து 92,700-க்கும் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். 54,600 ஹெக்டேர் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி நாசமடைந்தன.