தென் கொரிய அதிபராக இருந்த பார்க் குவென் ஹை பதவியில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து புதிய அதிபருக்கான தேர்தல் மே 6-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பார்க் குவென் ஹை மற்றும் அவரது நெருங்கிய தோழி சோய் சூன் சில் ஆகியோர் மீது ஊழல் குற்றம் சாட்டப்பட்டது. இதை யடுத்து தென் கொரிய நாடாளு மன்றம், அதிபர் பார்க்கை பதவி நீக்கம் செய்தது. இதை அந்நாட்டு அரசியல் சாசன நீதிமன்றம் கடந்த 10-ம் தேதி உறுதி செய்தது. இதனால் அடுத்த அதிபரை 2 மாதங்களுக்குள் தேர்வு செய்வது கட்டாயம் ஆகும்.
இந்நிலையில் புதிய அதிபருக் கான தேர்தல் மே 9-ம் தேதி நடை பெறும் என்று உள்துறை அமைச் சகம் நேற்று அறிவித்தது.
மிதவாத எதிர்க்கட்சித் தலை வரும் பார்க்கிடம் கடந்த 2012-ல் தோல்வி அடைந்தவருமான மூன் ஜே-இன் எதிர்வரும் தேர்தலில் வெற்றிபெற வாய்ப்புள்ளதாக கருத் துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இதனிடையே ஊழல் குற்றச் சாட்டுகள் தொடர்பாக முன்னாள் அதிபர் பார்க்கிடம் அடுத்த வாரம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.