உலகம்

நேபாளத்தில் நீர்மின் நிலைய சுரங்கத்தில் சிக்கிய 2 தொழிலாளர்கள் 9 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்பு

மீட்புப் பணியை நம்பிக்கையூட்டும் நிகழ்வாக மாற்றியுள்ளது

செய்திப்பிரிவு

காத்மாண்டு: நேபாளத்தில் பெரு​வெள்​ளத்​தில் ஏற்​பட்ட பேரழிவின் போது, நீர்​மின் நிலைய சுரங்​கத்​தில் சிக்​கிய 2 தொழிலாளர்கள் 9 நாட்​களுக்​குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இச்​சம்​பவம், மீட்பு பணி​யில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்​சி​யை​யும், நம்​பிக்​கை​யை​யும் அளித்​துள்​ளது.

நேபாளத்​தில் கடந்த ஆக.26-ம் தேதி, ஏற்​பட்ட பெரு​வெள்​ளத்​தில் சிக்கி 1,200-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​தனர். நதி​களை​யொட்டி அமைந்​திருந்த பல நீர்​மின் நிலைய திட்​டங்​கள் கடுமை​யாக சேதமடைந்​தன. ரசுவா மாவட்​டத்​தில் போடே கோசி ஆற்​றில் பேரழிவை ஏற்​படுத்​திய வெள்​ளத்​துக்​குப் பிறகு, திரிசூலி-3ஏ நீர்​மின் நிலைய திட்​டத்​தின் சுரங்​கப் பாதைக்​குள் 900 பேர் சிக்​கிக் கொண்​டிருப்​பது தெரிய வந்​தது. இதையடுத்​து, அங்கு மீட்​புப் பணி​கள் தீவிரப்படுத்​தப்​பட்​டன.

9 நாட்​களுக்​குப் பிறகு, அவர்​களை உயிருடன் மீட்​ப​தற்​கான நம்பிக்கை மெல்ல குறைந்து கொண்​டிருந்த நேரத்​தில், நேற்று ஒரு திருப்​பு​முனை ஏற்​பட்​டது. சுரங்​கப் பாதைக்​குள் சேற்​றில் சிக்கிக் கொண்​டிருந்த 2 பேரை உயிருடன் மீட்கப்பட்டனர்.

மீட்கப்பட்​ட​வர்​கள் கபீர் மஹர்​ஜன் (45), சஞ்​சய் ஷா (30) என்​பது தெரிய வந்துள்ளது. மீட்​கப்​பட்ட சஞ்​சய் ஷா சிகிச்​சைக்​காக நேபாள ராணுவ முகாமில் சேர்க்​கப்​பட்​டார். இரு​வரும் சுரங்​கப் பாதைக்​குள் சுமார் 170 மீட்​டர் தொலை​வில் இருந்து மீட்கப்பட்டனர்.

தரை​யில் இருந்த ஒரு பள்​ளத்​தில் இருந்து கபீர் மஹர்​ஜன் வெளியே இழுக்​கப்​பட்டு பின்​னர் ஸ்ட்​ரெச்​சர் மூலம் மருத்​து​வ​மனைக்கு கொண்டு செல்​லப்​பட்​டார். சஞ்​சய் ஷா முகம் முழு​வதும் சேறு படிந்த நிலை​யில் மீட்​கப்​பட்டு மருத்​து​வ​மனைக்கு கொண்டு செல்​லப்​பட்​டார். இரு​வரும் உயிருடன் மீட்​கப்​படு​வது குறித்த வீடியோ சமூக வலை​தளங்​களில் வைரலாகி​யுள்​ளது.

அங்​கிருந்​தவர்​கள் உற்​சாக குரலெழுப்பி மகிழ்ச்​சியை வெளிப்​படுத்​தினர். சஞ்​சய் ஷாவின் உடல் செயல்​பாடு​கள் இயல்​பாக உள்ள​தாக ராணுவ அதி​காரி ஒரு​வர் தெரி​வித்​துள்​ளார். சுரங்​கப் பாதை​யில் இருந்து வெளியே கொண்டு வரப்​பட்​ட​போது, தனது கணவர் சுயநினை​வுடன் இருந்​த​தாக​வும், மகர்​ஜனின் மனைவி தெரி​வித்​தார். மீட்​புப் பணி​யாளர்​கள், சுரங்​கப் பாதைக்​குள் சிக்கியுள்ள மற்​றவர்​களு​டன் தொடர்பை ஏற்​படுத்​தி​யுள்​ளனர்.

SCROLL FOR NEXT