உலகம்

ஹார்முஸ் ஜலசந்தி​யைக் கடந்து இந்​தி​யா வரும் 2 எல்பிஜி கப்பல்கள்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பதற்​றத்​துக்கு இடையே ஹார்முஸ் ஜலசந்தி​யைக் கடந்து இந்​தி​யாவை நோக்கி 2 எல்பிஜி கப்​பல்​கள் வந்து கொண்டிருக்​கின்​றன.

கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி முதல் ஈரான்​-அமெரிக்க, இஸ்​ரேல் படைகளுக்கு இடையே போர் நடந்து வந்​தது. இதனிடையே பாகிஸ்​தான் நாட்​டின் மத்​தி​யஸ்​தத்​தின் பேரில் போர் நிறுத்​தம் அமலில் உள்​ளது. மத்​திய கிழக்​கில் நில​வும் போர்ச் சூழல் காரணமாக ஹார்​முஸ் ஜலசந்​தியை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்​தது. இதனால் அங்கு கப்​பல் போக்​கு​வரத்து முடங்​கியது. இருந்​த​போ​தி​லும் இந்​தி​யாவை நோக்கி புறப்​பட்ட கப்​பல்​களுக்கு ஈரான் அனு​மதி அளித்து வருகிறது.

இதனால் கச்சா எண்​ணெய் மற்​றும் எரி​வாயு ஏற்​றிய சில கப்பல்கள் இந்​தி​யாவை வந்​தடைந்​தன. இதற்​கிடையே ஈரான் துறை​முகங்​களை முடக்​கும் வகை​யில் ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் கடந்த ஏப்​ரல் 13-ம் தேதி முதல் அமெரிக்க கடற்​படை முற்​றுகை நடவடிக்​கையை மேற்​கொண்டு உள்​ளது. இதற்கு பதிலடி​யாக ஈரான் அந்த ஜலசந்​தி​யில் தனது கட்​டுப்​பாட்டை அதி​கரித்து உள்ளது. இந்​நிலை​யில் நேற்று சமையல் எரி​வா​யுவை (எல்​பிஜி) ஏற்​றிக் கொண்டு 2 இந்​தி​யக் கப்​பல்​கள் இந்​தி​யாவை நோக்கிகிளம்​பின.

இந்த 2 கப்​பல்​களும் ஹார்​முஸ் ஜலசந்​தியை வெற்​றிகர​மாக கடந்து இந்​தி​யாவை நோக்கி வந்து கொண்​டிருக்​கின்றன என்று தெரிய​வந்​துள்​ளது. சைமி, என்​.​வி.சன்​ஷைன் ஆகிய 2 வர்த்தக சரக்​குக் கப்​பல்​களும் ஹார்​முஸ் ஜலசந்​தியை வெற்​றிகர​மாகக் கடந்து வந்து கொண்​டிருக்​கின்றன என்று இந்​திய பெட்​ரோலிய அமைச்​சகம் தெரி​வித்​துள்​ளது. கடுமை​யான பதற்​றத்​துக்கு இடையே இந்​தக் கப்​பல்​கள் ஹார்​முஸ் ஜலசந்​தி​யைக் கடந்துள்ளன. கடந்த 2 மாதங்​களில் 13 கப்​பல்​கள் ஹார்​முஸ் ஜலசந்​தி​யைக் கடந்து இந்​தி​யா​வுக்கு வந்​துள்ளன என்​பது குறிப்பிடத்தக்கது.

ஈரான் அனு​மதி

இதனிடையே ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் வர்த்​தகக் கப்​பல்​களுக்கு அனு​மதி தரப்​படும் என்று ஈரான் நாட்​டின் வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் அப்​பாஸ் அராக்சி தெரி​வித்​தார். அவர் மேலும் கூறும்​போது, “இந்​தி​யா, சீனா, ஜப்​பான், தென் கொரியா உள்​ளிட்ட நாடுகளுக்கு ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக சமையல் காஸ், கச்சா எண்​ணெயை ஏற்​றிக் கொண்டு கப்​பல்​கள் செல்​கின்​றன.

இந்த வழி​யாகச் செல்​லும் வர்த்​தகக் கப்​பல்​களுக்கு மட்​டுமே ஈரான் அனு​மதி வழங்​கும். அவ்​வாறு செல்​லும் வர்த்​தகக் கப்பல்கள், ஈரான் நாட்​டின் கடற்​படைக்கு ஒத்​துழைப்பை அளிக்​க வேண்டும். மீறினால் அவர்களுக்குப் பிரச்சினை ஏற்படும்" என்றார்.

SCROLL FOR NEXT