உலகம்

ரவுல் காஸ்ட்ரோவுடன் கைக்குலுக்கிய ஒபாமா

செய்திப்பிரிவு

அமெரிக்காவும் கியூபாவும் அருகில் இருந்தாலும், பல ஆண்டுகாலமாக இருநாடுகளுக்கிடையே பனிப்போர் நிலவுகிறது.

முக்கியமாக கியூபா புரட்சிக்குப் பின் கம்யூனிஸ்ட் தலைவரான பிடல் காஸ்ட்ரோ அதிபரான இரண்டாவது ஆண்டில் (1961) இருநாடுகளும் தங்களுக்கு இடையிலான ராஜாங்க உறவுகளை முறித்துக் கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் மேடை ஏறி பேசுவதற்கு முன்பாக ஒபாமா தாமாகவே முன்வந்து கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோவுடன் கைகுலுக்கினார்.

சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ள இந்த நிகழ்வு இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் எந்தவகையிலான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை.

SCROLL FOR NEXT