இராக் தலைநகர் பாக்தாத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் ஐஎஸ் தற்கொலைப் படை தீவிரவாதி நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 125 பேர் உயிரிழந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
ரம்ஜான் பண்டிகை நெருங்கி வருவ தால் இஸ்லாமிய நாடுகளில் அதற்கான கொண்டாட்டம் களைகட்டி வருகிறது. இராக்கிலும் ரம்ஜான் பண்டிகையை முன் னிட்டு பொதுமக்கள் புத்தாடை, இனிப்பு கள், பரிசுப் பொருட்கள் ஆகியவற்றை வாங்கி வருகின்றனர். தலைநகர் பாக்தாத் தில் உள்ள கராடா என்ற சந்தைப் பகுதி யிலும் நேற்று பொதுமக்கள் பண்டிகைக் கான பொருட்களை வாங்க மகிழ்ச்சி யுடன் குவிந்து வந்தனர். அப்போது வெடி குண்டுகள் நிரப்பிய காரை ஓட்டி வந்த ஐஎஸ்ஸின் தற்கொலைப் படை தீவிரவாதி ஒருவன் அதை வெடிக்கச் செய்தான்.
பயங்கர சத்தத்துடன் அந்த குண்டு வெடித்ததில் வீதியில் இருந்த பல கட்டிடங் கள் இடிந்து விழுந்து உருக்குலைந்தன. இடிபாடுகளிலும் குண்டுவெடிப்பிலும் சிக்கி சுமார் 125 பேர் உயிரிழந்திருப்பதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. படுகாயமடைந்த 150-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும் பாலானோர் குழந்தைகள், பெண்கள் என கூறப்படுகிறது.
ஐஎஸ் வசமிருந்த பலுஜா நகரத்தை இராக் அரசு படைகள் கடந்த வாரம் கைப்பற்றியது. இந்நிலையில் இந்த கார் குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்றுள்ள ஐஎஸ், ஷியா பிரிவு முஸ்லிம்களை குறிவைத்தே இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிவித்துள்ளது.
சம்பவம் நிகழ்ந்த இடத்தை இராக் பிரதமர் ஹைதர் அல் அபாடி பார்வையிட் டார். அப்போது உறவினர்களை இழந்த சோகத்தில் இருந்த பலர் பிரதமரை நோக்கி ‘திருடன்’ என உரக்க குரல் எழுப்பி யதால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்து அவர் உடனடி யாக சென்றார். இதற்கிடையில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்த ஒரு சில மணி நேரங்களுக்குள், கிழக்கு பாக்தாத் பகுதியில் மற்றொரு குண்டு வெடித்தது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். 16 பேர் படுகாயமடைந்தனர்.