இலங்கையில் சிறைச்சாலை பஸ் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 5 கைதி களும் 2 போலீஸ்காரர்களும் உயிரிழந்தனர்.
இலங்கையின் களுத்துறை வடக்கு சிறைச்சாலையில் அடைக் கப்பட்டுள்ள 5 கைதிகளை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்துவதற் காக நேற்று பஸ்ஸில் அழைத்துச் சென்றனர். அவர்களுக்கு பாது காப்புக்காக ஆயுதம் ஏந்திய 6 போலீஸ்காரர்கள் உடன் சென்றனர்.
சிறைச்சாலை பஸ் வனப்பகுதி யில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்ட னர். இதில் 5 கைதிகள், 2 போலீஸ் காரர்கள் உயிரிழந்தனர். மேலும் 4 போலீஸ்காரர்கள் காயமடைந்த னர். அவர்கள் நாகொட மருத் துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் அவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
இதுதொடர்பாக இலங்கை போலீஸ் வட்டாரங்கள் கூறியபோது, மர்ம நபர்கள் தாக்குதலில் கைதிகள் உதயசாந்த பத்திரன உட்பட 5 கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சிறைத் துறை அதிகாரிகள் சன்னிகம, விஜயரத்ன ஆகியோர் பலியாகினர். கோஷ்டி மோதல் காரணமாக கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தப்பியோடிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகிறோம் என்று தெரிவித்தனர்.