உலகம்

பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் விலகியதால் அமெரிக்கா தனிமைப்படுத்தப்படும்: ஈரான்

ஏஎஃப்பி

பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியுள்ளது அந்நாட்டை தனிமைப்படுத்தும் என்று ஈரான் கூறியுள்ளது.

இதுகுறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் பக்ரம் காசெமி கூறும்போது, பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து விலகியுள்ளது அமெரிக்கவின் பொறுப்பற்ற நடவடிக்கை காட்டுகிறது. இந்த நடவடிக்கை மூலம் அந்நாடு எதிர்காலத்தில் தனிமைப்படுத்தப்படும்" என்று கூறினார்.

பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தால் அமெரிக்காவில் தொழில் நிறுவனங்கள் மற்றும் வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படுகின்றன. பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம் ஒருதலைபட்சமாக உள்ளது, அமெரிக்கா ஏகப்பட்ட பில்லியன் டாலர்கள் தொகையை செலவழிக்கிறது. ஆனால் இந்தியா, சீனா போன்ற பிற நாடுகளே பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தால் பயனடைக்கின்றன. இதனால் அமெரிக்கா பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக ட்ரம்ப் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT