அபுதாபி எகிப்தைச் சேர்ந்த இமான் அகமது (36) 500 கிலோ உடல் எடையுடன் அவதிப்பட்டு வந்தார். மும்பை தனியார் மருத்துவமனையில் வழங்கப்பட்ட தீவிர சிகிச்சைக்குப் பின் அவரது உடல் எடை 176.6 என்ற அளவுக்குக் குறைந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் அவரை சிறப்பு விமானத்தில் அபுதாபிக்கு அனுப்பி வைத்தனர்.
அபுதாபியில் உள்ள விபிஎஸ் புர்ஜீல் மருத்துவமனையில் தற் போது இமான் சேர்க்கப்பட் டுள்ளார். இதுகுறித்து மருத்துவ மனை தலைமை மருத்துவ அதிகாரி யாசின் அல் ஷஷாத் நேற்று கூறும்போது, ‘‘மும்பையில் இருந்து விமானத்தில் நல்லபடியாக இமான் வந்து சேர்ந்தார். இங்கு ஓராண்டு தொடர்ந்து பிசியோதெரபி உட்பட பல்வேறு சிகிச்சைகள் இமானுக்கு வழங்கப்படும்’’ என்றார்.