உலகம்

அன்று ஐ.எஸ். பாலியல் அடிமை: இன்று ஐ.நா. நல்லெண்ண தூதர்

செய்திப்பிரிவு

ஆள் கடத்தலால் பாதிக்கப் பட்டோருக்கான, ஐநாவின் நல்லெண்ணத் தூதராக, இராக் கைச் சேர்ந்த இளம்பெண் நாடியா முராத் நியமிக்கப்பட்டுள்ளார்.

இராக்கின் வடக்குப் பகுதியில் சிஞ்சார் நகருக்கு அருகே உள்ள கிராமத்தின் யசீதி இனத் தைச் சேர்ந்த நாடியா முராத் பாஸீ தாஹா (23), 2014-ம் ஆண்டு இராக்கில் ஐஎஸ் தீவிர வாதிகளால் பாலியல் அடிமை யாக கடத்தப்பட்டு, பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளானவர்.

இவருடன் சேர்த்து கடத்தப் பட்ட ஏராளமான சிறுவர்களை, தீவிரவாதிகள் இவரின் கண் முன்னாலேயே சுட்டுக்கொன்று ரத்த வெள்ளத்தில் மிதக்கச் செய் துள்ளனர். தீவிரவாத கும்ப லால் பல முறை பாலியல் அடிமையாக விலை பேசி விற்கப் பட்டுள்ளார்.

வார்த்தைகளால் விவரிக்க முடியாத பலவிதமான கொடுமை களை அனுபவித்து, உயிர் தப்பி வந்திருக்கும் இவரை, ஆள் கடத்தலால் பாதிக்கப்பட்ட வர்களுக்கான நல்லெண்ணத் தூதராக ஐநாவின் குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு அலுவலகம் நியமித்துள்ளது.

தீவிரவாதிகளால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாலும், அஞ்சி அடங்கிவிடாமல், அவர்களுக்கு எதிராக குரல் கொடுப்பதோடு, தன்னைப் போன்று பாலியல் அடிமைகளாக சிக்கியவர்களை மீட்க, துணிச்சலுடன் போராட முன்வந்ததால், அவருக்கு இந்த கவுரவம் வழங்கப்பட்டதாக, ஐநா பொதுச் செயலாளர் பான் கி மூன் தெரிவித்தார். தீவிரவாதி களின் கோரப் பிடியில் சிக்கி உயிர் தப்பிய ஒருவருக்கு ஐநாவில் இதுபோன்ற பதவி வழங்கப் படுவது இதுவே முதல்முறை. யசீதி இனப் படுகொலைக்கு எதிராகவும் நாடியா முராத் போராடி வருகிறார். அமைதிக்கான நோபல் பரிசுக்கும் இவரின் பெயர் பரிசீலிக்கப்படுகிறது.

SCROLL FOR NEXT