சிங்கப்பூரில் உள்ள 155 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ தண்டாயுதபாணி கோயில் அந்த நாட்டின் தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1859-ம் ஆண்டில் நாட்டுக்கோட்டை செட்டியார் சமுதாயத்தால் இந்த கோயில் கட்டப்பட்டது. அதன்பின் 1980-ம் ஆண்டில் இந்த கோயிலை மறுசீரமைக்கும் பணி தொடங்கி 1983-ம் ஆண்டில் நிறைவடைந்தது. தென்னிந்திய கட்டுமானக் கலை அடிப்படையில் கோயில் கட்டப்பட்டுள்ளது. இக் கோயிலின் மூலவர், முருகன், சுப்பிரமணியன், ஸ்ரீதண்டாயுதபாணி என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார்.
சிங்கப்பூர் கலாச்சாரத் துறை அமைச்சர் லாரன்ஸ் வாங், கோயிலை நினைவுச் சின்னமாக அறிவித்து அதற்கான கல்வெட்டைத் திறந்துவைத்தார். இந்த கோயில் சிங்கப்பூரின் 67-வது தேசிய நினைவுச் சின்னமாகும்.