உலகம்

பாலஸ்தீன தீவிரவாதிகள் மூவர் சுட்டுக்கொலை

பிடிஐ

ஜெருசலேம் நகரில் இஸ்ரேல் பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதை தொடர்ந்து பாலஸ்தீன தீவிரவாதிகள் மூவரை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.

ஜெருசலேமின் பழைய நகரில் உள்ள அல்-அக்ஸா மசூதி, சன்னி முஸ்லிம்களின் மூன்றாவது புனித தலமாக கருதப்படுகிறது. இங்கு நேற்று முன்தினம் மாலை கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்கு கரை பகுதியில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டனர். இத் தொழுகைக்கு பிறகு அங்குள்ள டமாஸ்கஸ் கேட் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஹடஸ் மால்கா (23) என்ற இஸ்ரேல் பெண் போலீஸ் அதிகாரியை தீவிரவாதி ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இதனிடையே ஹடஸ் மால்கா கத்தியால் குத்தப்பட்டவுடன் அருகில் இருந்த மற்ற போலீஸார் அத்தீவிரவாதியை சுட்டுக்கொன்றனர். அப்போது போலீஸாரை நோக்கி சுட்ட, மேலும் இரு தீவிரவாதிகளும் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட மூவரும் மேற்கு கரை பகுதியை சேர்ந்த பாலஸ்தீனர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஜெருசலேம் காவல்துறை தலைவர் யோரம் ஹலேவி கூறினார்.

SCROLL FOR NEXT