தீவிரவாத கருத்தை போதித்து நண்பர் ஒருவரை சிரியாவுக்கு அனுப்பி வைத்ததாக, இந்தியர் ஒருவரை சிங்கப்பூர் அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேற்றினர். சிங்கப்பூரின் நிரந்தரக் குடி ரிமை பெற்ற குல் முகமது எம். மரைக்கார் (37) என்ற இந்தியர், அங்கு சிஸ்டம் அனலிஸ்டாக பணியாற்றி வந்தார். சிங்கப்பூரில் பல்பொருள் அங்காடி ஒன்றில் பணிபுரியும் ஹாஜா பக்ருதீன் உஸ்மான் அலி (37) என்பவர் இவரது நண்பர்.
இந்நிலையில் உஸ்மான் அலிக்கு, குல் முகமது தீவிரவாத கருத்துகளை போதித்து அவரை உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா வுக்கு அனுப்பி வைத்ததாக கூறப் படுகிறது. சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு ஆதரவான படைகளை எதிர்த்துப் போரிட உஸ்மான் அலி சென்றுள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதன் தொடர் நடவடிக்கையாக குல் முகமது சிங்கப்பூரை விட்டு வெளியேற்றப்பட்டதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.