தென்னாப்பிரிக்காவில் போஸீஸ் துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலியான சம்பவத்தில், பொது மக்கள் அமைதி காக்கவேண்டும் என்று அந்நாட்டு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவின் பிரிட்டோரியா நகருக்கு அருகில் டவுன்ஷிப் ஒன்றில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் விநியோகம் இல்லாததால், அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது வன்முறைப் போராட்டமாக மாறியதால் போலீஸார் துப்பாக் கிச்சூடு நடத்தினர்.
இதில் இருவர் பலியாகினர். இதன் பிறகும் பொதுமக்கள் தங்கள் போராட் டத்தை தீவிரப்படுத் தியுள்ளதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில், இச்சம்பவத்தில் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும், சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் என்று தென்னாப்பிரிக்க காவல்துறை அமைச்சர் நதி மதேத்வா கேட்டுக்கொண்டுள்ளார். போலீஸார் அத்துமீறி நடந்து கொண்டதாகவும், பொதுமக்களை கொடூரமாக தாக்கியாதவும் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், “இது உண்மையாக இருக்குமானால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று நதி மதேத்வா உறுதி அளித் துள்ளார்.