உலகம்

ரகசிய ஆவணங்களை ரஷியாவுக்குக் கொடுக்கவில்லை: ஸ்னோடென்

செய்திப்பிரிவு

எந்தவொரு ரகசிய ஆவணங்களையும் நான் ரஷியாவுக்குக் கொண்டு செல்லவில்லை. என்னிடமிருந்த எந்த ஆவணத்தையும் ரஷிய அரசுக்குக் கொடுக்கவில்லை என அமெரிக்க உளவு ரகசியங்களை வெளியிட்ட ஸ்னோடென் தெரிவித்துள்ளார்.

தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழ், ஸ்னோடென்னிடம் இணையதளம் மூலமாக ரகசிய பேட்டி கண்டது. அதன் விவரங்கள் கடந்த வியாழக்கிழமை அந்நாளிதழில் வெளியாகியுள்ளன.

அதில் ஸ்னோடென் கூறியிருப்ப தாவது: ஹாங்காங்கிலிருந்து ரஷியாவுக்கு அடைக்கலம் தேடிச் செல்லும் முன் என்னிடமிருந்த ரகசிய தகவல்களை செய்தியாளர்களிடம் தெரிவித்து விட்டேன். ரஷியாவுக்கு எவ்வித ரகசிய ஆவணங்களையும் கொண்டு செல்லவில்லை. ரஷிய அரசுக்கு என் ஆவணங்கள் கிடைக்கவில்லை.

என்னுடன் எந்த ஆவணத்தையும் நான் எடுத்துச் செல்லவில்லை. அதனால், பொதுமக்களுக்கு நன்மை விளையாது.

என் பணியின் போது, சீனாவின் சைபர் பிரிவு உளவுத்துறையைச் சமாளிப்பதற்கான பயிற்சியளிக்கப் பட்டது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமையினர் (என்எஸ்ஏ) நான் ரஷிய,சீன மற்றும் பிற வெளிநாட்டு உளவுத்துறைகளுக்குத் தேவை யான தகவல்களைக் கொடுத்து விட்டதாக நினைக்கின்றனர். அப்படி எதுவும் இல்லை. கசியவிடப்பட்ட ரகசியங்களால் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டதற்கான ஒரு உதாரணத்தையாவது அவர்க ளால் தர முடியுமா? சீன உளவுத்துறையோ, ரஷிய உளவுத்துறையோ எதுவாக இருப்பினும் என் ஆவணத்தின் விவரங்கள் அவர்களுக்கு கிடைக்க சர்வநிச்சயமாக வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT