உலகம்

பிரிட்டன் மகாராணி சம்பளம் 8 % உயர்வு

ஐஏஎன்எஸ்

வரும் 2018-19ம் நிதியாண்டில் பிரிட்டன் மகாராணி 2-வது எலிசெபத் தனது செலவுகளை சமாளிக்க வசதியாக அவரது சம்பளம் 8 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அவரது சம்பளம் ரூ.680 கோடியாக இருக்கும் என பிரிட்டன் அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரிட்டன் மகாராணி 2-வது எலிசெபத்துக்காக பணியாற்றும் ஊழியர்கள், அவரது பயண செலவுகள் ஆகியவற்றுக்கான ஊதியம் மற்றும் செலவினங்கள் வழங்குவதற்காக தனிச் சட்டம் மூலம் பிரிட்டன் அரசு சார்பில் நிதி வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 2018-19-ம் ஆண்டில் எலிசெபத் தனது செலவுகளை சமாளித்துக் கொள்ளும் வகையில் அவருக்கான அந்த சம்பள நிதி 8 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரிட்டன் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில், ‘‘மகாராணியின் அலுவல்பூர்வமான செலவுகள், பொது நிதியில் இருந்து செலவிடப்படுகின்றன. இதற்கு மாற்றாக கிரவுன் எஸ்டேடின் வருமானத்தை அரசிடம் மகாராணி வழங்கி வருகிறார்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT