தென்சீனக் கடலில் சீன கடற்படை 4 நாட்கள் போர் பயிற்சியை நேற்று தொடங்கியது. இதனால் அந்த கடல் பிராந்தியத்தில் பதற்றம் எழுந்துள்ளது.
தென்சீனக் கடல் தொடர்பாக சீனாவுக்கு எதிராக பிலிப்பைன்ஸ் அரசு சர்வதேச தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இதில் தென்சீனக் கடலின் குறிப்பிட்ட பகுதி பிலிப்பைன்ஸுக்கு சொந்தமானது, சீனாவுக்கு எவ்வித உரிமையும் இல்லை என்று தீர்ப்பாயம் அண்மையில் தீர்ப்பளித்தது.
ஆனால் இந்தத் தீர்ப்பை ஏற்கமாட்டோம் என்று சீனா அறிவித்துள்ளது. மேலும் தென் சீனக் கடலில் சீன போர்க்கப்பல்கள் குவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில் சர்ச்சைக்குரிய கடல் பகுதியில் 4 நாட்கள் போர் பயிற்சியை சீன கடற்படை நேற்று தொடங்கியது.
அமெரிக்க கடற்படை தலைமைத் தளபதி ஆடம் ஜான் ரிச்சர்ட்ஸன் 3 நாட்கள் பயணமாக நேற்று சீனா சென்றார். தென்சீனக் கடல் விவகாரம் குறித்து அந்த நாட்டின் கடற்படைத் தளபதிகளுடன் அவர் ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது.