மாலத்தீவில் நவம்பர் 9-ல் அதிபர் பதிக்கான மறுதேர்தல் நடைபெறும் என அந்நாட்டு தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நிறுத்தப்பட்ட அதிபர் மறுதேர்தல்:
மாலத்தீவு அதிபரை தேர்ந்தெடுக்க நடைபெறவிருந்த மறுதேர்தல், கடந்த 19- ஆம் தேதியன்று கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டது. தேர்தல் கண்காணிப்பில் சர்வதேச தலையீடு வேண்டும் என மாலத்தீவின், முன்னணி கட்சி கோரிக்கை விடுத்ததை அடுத்து காவல்துறையினர் ஓட்டுப்பதிவுக்கு தடை விதித்தனர். காவல்துறைசினரின் தலையீட்டை அடுத்து தேர்தல் நிறுத்தப்பட்டது.
செல்லாமல் போன முதல் கட்ட தேர்தல்:
கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி, மாலத்தீவில் புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்க முதல்கட்டத் தேர்தல் நடைபெற்றது. அதில் போலி வாக்குகள் உள்பட பல முறைகேடு சம்பவங்கள் நடைபெற்றதாக ஜுமூரீ கட்சித் தலைவர் காசிம் இப்ராஹிம், மாலத்தீவு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கின் அடிப்படையில் விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், அதிபர் தேர்தலை அக்டோபர் 20ஆம் தேதிக்குள் மீண்டும் நடத்த வேண்டும் எனவும், 2ஆம் கட்ட அதிபர் தேர்தலுக்கு அவசியம் இருந்தால் அதனை நவம்பர் 3ஆம் தேதிக்குள் நடத்தவும் உத்தரவிட்டது.
இந்நிலையில், மாலத்தீவு தேர்தல் கமிஷனர் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் நவம்பர் மாதம் 9- ஆம் தேதியன்று முதல் சுற்று னடைபெறும் என்றும் தேவைப்பட்டால்16ம் தேதி இரண்டாவது சுற்றாகவும் அதிபர் தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.