தங்களின் 50 கோடி பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளன என யாஹூ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக யாஹூ நிறுவனம் கூறியிருப்பதாவது:
கடந்த 2014-ம் ஆண்டின் பிற் பகுதியில் யாஹூவின் சுமார் 50 கோடி பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளன. அரசு ஆதர வுடன் இந்தத் திருட்டு நடைபெற் றிருக்க வேண்டும்.
பெயர்கள், மின்னஞ்சல் முக வரிகள், தொலைபேசி எண்கள், பிறந்த தேதி, கடவுச்சொற்கள், பாது காப்பு அம்ச கேள்வி-பதில்கள் உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளன.
பாதுகாக்கப்படாத கடவுச் சொற் கள், பண அட்டை விவரங்கள் அல்லது வங்கிக் கணக்கு விவரங் கள் ஆகியவை திருடப்படவில்லை.
இதுதொடர்பாக காவல் துறை யுடன் யாஹு பேசி வருகிறது. எஃப்பிஐ இதுதொடர்பாக விசா ரணை நடத்தி வருகிறது.
இவ்வாறு யாஹு தெரிவித் துள்ளது.